பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி உழவர் சந்தை இன்று மூடல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கொரேனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி உழவர் சந்தை இன்று மூடப்படுகிறது.கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் கீரைகளை உழவர் சந்தையில் விற்பனை செய்கின்றனர்.பருவ நிலை மாற்றத்திற்கேற்ப 5 டன் முதல் 15 டன் வரை காய்கறிகள் விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகிறது. காய்கறிகள் தினந்தோறும் அறுவடை செய்யப்பட்டு புதிதாக விற்கப்படுவதால் மக்கள் மட்டுமின்றி கடைக்காரர்களும் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். நாள்தோறும் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை நடக்கிறது.கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயினை தடுக்க நாள் தோறும் கைகளை நன்றாக கழுவவேண்டும், முகத்தினை அடிக்கடி தொடக்கூடாது, பொதுமக்கள் கூட்டத்தை தவிர்த்தல் உட்பட பல்வேறு நிபந்தனைகள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.அதையொட்டி கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடரினை தண்ணீரில் கலந்து தெளிக்கப்படுகிறது. நாள்தோறும் 2 முறை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.உழவர்சந்தை நிர்வாக அலுவலர் இசைசெல்வன் ஊழியர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கைகழுவும் முறைகளை பற்றி எடுத்துரைத்தார். உதவி வேளாண் அலுவலர்கள் இளவரசன், குமரேசன் உடனிருந்தனர்.தினந்தோறும் காலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக இருப்பதால் கலெக்டர் கிரண் குராலா அறிவுறுத்தலின் படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உழவர் சந்தை இன்று 21ம் தேதி அடைக்கப்படுகிறது என நிர்வாக அலுவலர் இசைசெல்வன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X