நகராட்சியில் 'நோய்கள் இலவசம்': தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement
 நகராட்சியில் 'நோய்கள் இலவசம்': தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு

பந்தலுார்:பந்தலுார் பகுதி கழிவுநீர் கால்வாய்களில், தேங்கும் கழிவுநீரால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பந்தலுாரில், நெல்லியாளம் நகராட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. தாலுக்காவின் தலைநகராகவும் உள்ளது. நகராட்சியின் பல பகுதிகளில், கழிவுநீர் சீராக வழிந்தோடும் வகையில், கால்வாய்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. மேலும், அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களும் முறையாக துார்வாரி சீரமைக்காததால், கழிவுகள் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி, நோய்கள் பரவி வருகிறது.அதில், பந்தலுார் பஜார் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே, மைதானம் செல்லும் சாலை, ஹட்டிவயல் செல்லும் நடைபாதைகளை ஒட்டிய பகுதி, மாணவிகள் விடுதியை ஒட்டிய பகுதிகளில் கால்வாய்களில் கழிவுகள் நிறைந்த தண்ணீர் நிறைந்துள்ளது.இவை வழிந்தோட ஏதுவாக கால்வாய் அமைக்க நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அதிகளவில் குடியிருப்புகள் நிறைந்துள்ளதால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி சுகாதார துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X