சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்துக்கு இடையூறு: 7 பேர் மீது வழக்கு

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்: போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் தள்ளுவண்டியில் கடை வைத்து வியாபாரம் செய்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.திருக்கோவிலுார், கடை வீதி, வடக்கு வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் சாலையின் குறுக்கே கடைகளை வைத்து விற்பனையில் ஈடுபடுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.அதனைத் தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த திருக்கோவிலுார், அண்ணா நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ரஜினி, 30; மேலவீதி ஜோதி, 55; நாதமுனி நகர் ராமசாமி மகன் பாலமுருகன், 30; சைலோம் சக்கரபாணி மகன் காளிதாஸ், 39; முனியன் மகன் சுப்ரமணியன், 50; வடமருதுார் மாயக்கண்ணன், 45; ஆவியூர் கிருஷ்ணன், 45; ஆகியோர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X