பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி

Added : மார் 21, 2020
Share
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் பக்கத்தில் மகளிர் காவல் நிலையம் உள்ளது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுக்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து வருவது வழக்கம்.இந்த போலீஸ் நிலையத்தில், தினமும், குடும்ப பிரச்னைகள் குறித்து 10க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்படுகிறது. இதை இன்ஸ்பெக்டர் அல்லது சப் இன்ஸ்பெக்டர் அழைத்து விசாரித்து, சமரசம் செய்து அனுப்பி வைப்பர். பாலியல் பிரச்னைகளில் சிக்கும் நபர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தும் வருகின்றனர்.இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த விஜி 10 தினங்களுக்கு முன்பு, விக்கிரவாண்டி மகளிர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு யாரையும் நியமிக்கவில்லை.அனைத்து பணிகளையும் இன்ஸ்பெக்டரே கவனித்து வந்தார். அவருக்கு பதிலாக, ஜோதி என்ற இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டார். அவரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக புகார் அளிக்க வரும், பொதுமக்கள் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.ஒரு சில வழக்குகளை மட்டும், திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, அழைத்து விசாரித்து வருகிறார். மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X