பொது செய்தி

தமிழ்நாடு

16.50 லட்சம் முககவசம் வாங்க 'ஆர்டர்' தரப்பட்டுள்ளது: அரசு தகவல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, ௧௬.௫௦ லட்சம் முககவசம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் தாக்கல் செய்த மனு:முககவசம், கிருமி நாசினியை, அத்தியாவசிய பொருட்களாக, மத்திய நுகர்வோர் மற்றும் உணவுத் துறை அறிவித்துள்ளது. பதுக்கலை தடுக்கவும், பொருட்கள் கிடைக்கவும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிருமி நாசினி, முககவசங்கள், சென்னையில் எங்கும் கிடைக்கவில்லை.மத்திய அரசின் அறிவிப்பை அமல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிடவில்லை என்றால், கிருமி நாசினி, முக கவசம் பற்றாக்குறையால், மக்கள் அவதிப்படுவர். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மருந்தகங்கள், கடைகளில் சோதனை நடத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.தாக்கல்மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. சுகாதார துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணியரிடம், 'தெர்மல் ஸ்கேன்' சோதனை நடத்தப்படுகிறது. இதுவரை, ௧.௮௯ லட்சம் பயணியர் சோதிக்கப்பட்டுள்ளனர். ௨,௯௮௪ பயணியர், தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணியரை தனிமைப்படுத்த, சென்னையை அடுத்த பூந்தமல்லி, மதுரை, கோவை, திருச்சியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.தற்போது, ௩.௮௦ லட்சம் எண்ணிக்கையில் முக கவசங்கள் உள்ளன; ௧௬.௫௦ லட்சம் முககவசங்கள் வாங்க, 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது. ௨௨௨ மாதிரிகள் எடுக்கப்பட்டதில், ௧௬௬ பேருக்கு, வைரஸ் பாதிப்பு இல்லை என, தெரிய வந்துள்ளது; இரண்டு பேருக்கு அறிகுறி உள்ளது;

௫௪ மாதிரிகள் ஆய்வில் உள்ளன.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கிருமி நாசினிஅரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, முககவசத்தின் விலையை ஒழுங்குபடுத்தவும், கிருமி நாசினி உற்பத்தியை அதிகரிக்கவும், சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து, தகவல் பெறுவதாக தெரிவித்தார். தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்த கோரிக்கைக்கும், அரசிடம் தகவல் பெறும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, வரும், ௨௩க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X