சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட மாநிலங்களில் தவிக்கும் தமிழக லாரிகள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

மதுரை : 'கொரோனா' அச்சுறுத்தலால் தமிழகத்தில், 40 சதவீதம் லாரி போக்குவரத்து குறைந்துள்ளது. வட மாநிலங்களுக்கு சரக்கு எடுத்துச் சென்ற லாரிகள், தமிழகம் திரும்ப முடியால், தவிக்கின்றன.

தமிழகத்தில், 4.50 லட்சம் லாரிகள் உள்ளன. இதில், 1.50 லட்சம் லாரிகள், வெளி மாநில சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா அச்சம் காரணமாக, சரக்குகளை வாங்கவும், அங்கிருந்து அனுப்பவும், வட மாநில வியாபாரிகள் தயங்குகின்றனர். இதனால், 40 சதவீதம் லாரி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மதுரை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர், சாத்தையா கூறியதாவது: தமிழகத்திற்குள் மட்டும் தான் லாரி போக்குவரத்து உள்ளது. துாத்துக்குடி, கொச்சி துறைமுகங்களுக்கு சரக்கு எடுத்துச் செல்வது, தடைபட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து, மஞ்சள் ஏற்றுமதியும் ஸ்தம்பித்துள்ளது.வட மாநிலங்களில் இருந்து, மளிகை பொருட்களை கொண்டு வருவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தட்டுப்பாடு, விலை உயர்வுக்கு வாய்ப்புள்ளது.

காய்கறி, பழங்கள் மட்டும் எடுத்து வரப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளும், அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகளும், கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.டிரைவர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, முன் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்கு, கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X