பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் நகராட்சி சுடுகாட்டை சீரமைக்கும் பணிகள் மும்முரம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள நகராட்சி தகன மேடையைச் சுற்றி பூங்கா, வாகன பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.திண்டிவனம் நகராட்சி சார்பில், 55 லட்சம் ரூபாய் செலவில் சலவாதி ரோட்டிலுள்ள சுடுகாட்டில், நவீன எரிவாயு தகன மேடை, திறக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. இதில் விறகு கட்டைகளைக் கொண்டு, தீ மூட்டி அதிலிருந்து கிடைக்கும் எரிபொருள் மூலம் இறந்தவர்களின் உடல் தீயூட்டப்பட்டது.இந்த நடைமுறையில் எரிப்பதற்கு அதிகளவில் நேரம் ஆனது. அதனால், பழைய முறையில் இருப்பதை மாற்றிவிட்டு, எல்.பி.ஜி., சிலிண்டர் இணைப்பை பொறுத்தி உடல்களை தீயூட்டும் முறைக்கு மாற்றியமைக்கும் பொருட்டு, நகராட்சி சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் முயற்சியின் பேரில், விழுப்புரம் கே.கே.ரோடு சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ளது போல், இறந்தவர்களின் உடல்களை வைத்து சடங்குகள் செய்வதற்கான போர்டிகோ, பூங்கா, கழிவறை, வாகன பார்க்கிங் வசதி அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.இதேபோல், நகராட்சி சார்பில் 30 லட்சம் ரூபாய் செலவில், சுற்றுப்புற சுவர் அமைத்தல், புதியதாக கிணறு தோண்டுதல், தகனம் செய்யும் இடத்தில் கிரானைட் கற்கள் புதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது, இறந்தவர்களின் உடல்களை வைத்து சடங்குகள் செய்வதற்கான போர்டிகோ கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இதே போல், சுடுகாட்டைச் சுற்றி உயரமான சுவர் அமைக்கும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. இந்த பணிஅனைத்தும் 6 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X