பொது செய்தி

தமிழ்நாடு

மோடி அறிவிப்பு…: வியாபாரிகள் முழு ஆதரவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : பிரதமர் மோடி, 'நாளை, மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்; காலை, 7:00 முதல் இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. 'மக்கள் வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். கொரோனாவை தடுத்து, நம் வலிமையை நிரூபிப்போம்' என, மக்களிடம், நேற்று முன்தினம் உரையாற்றினார்.

இந்த அழைப்பை ஏற்று, தமிழக வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், பால் முகவர்கள் உள்ளிட்ட, அனைத்து வியாபாரிகளும், கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு, ஆதரவு தெரிவித்துள்ளனர். வெங்கடசுப்பு, தலைவர், தமிழக ஓட்டல்கள் சங்கம்: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை, அனைத்து ஓட்டல்களும் மூடப்படும். நம் செயல் வாயிலாக, கொரோனா வைரஸ் சவாலை சமாளிக்க, இந்தியா தயாராக உள்ளது என்பதை, உலகிற்கு நிரூபிப்போம். விக்கிரமராஜா, தலைவர், தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு: பொது மக்களுக்காக, தினமும் சேவை பணியாற்றும் வணிகர்களாகிய நாம், முழு கடையடைப்பு செய்து, அனைவரும் வீட்டிலேயே இருந்து, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு, நம் பங்களிப்பை, தேசத்திற்கு வழங்குவோம்.

பொன்னுசாமி, நிறுவனர், பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம்: தமிழகம் முழுவதும் உள்ள, 1.50 லட்சம் பால் முகவர்களும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு மேல், பால் வினியோகத்தில் ஈடுபட போவதில்லை. அதேசமயம், மக்களுக்கு, பால் தடையின்றி கிடைக்க, 21ம் தேதி காலை, மாலை என, இரு வேளைகளில் கூடுதலாக கொள்முதல் செய்து, அன்று இரவும், ஞாயிறு அதிகாலையும் வழங்குவர். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X