சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய் கண் எதிரே நீரில் மூழ்கி 3 சிறுமி பலி

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கடலுார் : கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40; மனைவி ஸ்டெல்லா, 33. பெங்களூரில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு மூன்று மகள்கள்.நேற்று முன்தினம் ஸ்டெல்லா, மூன்று மகள்களுடன், கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த மலையனுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.நேற்று பகல் ஸ்டெல்லா, அவரது மகள்கள் சுவேதா, 14, நிவேதா, 11, சுஜாதா, 8 ஆகியோர், அப்பகுதி விவசாய கிணற்றில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து, குளித்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, மூன்று சிறுமியரும், கிணற்றில் தவறி விழுந்தனர்.அதிர்ச்சி அடைந்த ஸ்டெல்லா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள், சிறுமியர் மூன்று பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
21-மார்-202007:04:38 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இத்துயர சம்பவத்தை படித்த பிறகு மனம் பதைபதைக்கிறது. மூன்று குழந்தைகளையும் இழந்த பெற்றோர் கதறி அழும் வேளை இது.. போறாத காலம் போலும்.. இப்படி அபாய இடங்களில் குளிக்க வேணாம் என தாய் எச்சரித்து இருக்க வேண்டும்.. ஏனோ போறாத காலம் வடுக்கள் இறந்து நிற்கின்றன.. மிக சோகமான நியூஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X