பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதுகாப்பு பணி மாவட்ட அதிகாரிகள் தீவிரம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம், மார்க்கெட் கமிட்டி, தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்ட மையம் ஆகியவற்றில் ஆய்வு செய்தார். அங்கு, கொரோனா பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும், புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் வாகனத்தை துவக்கி வைத்தார். அப்போது, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், மாவட்ட திட்ட இயக்குநர் மகேந்திரன், நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி உடனிருந்தனர்.இதேபோன்று, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியை வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி உடனிருந்தார்.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 8,700 டிரைவர்களுக்கும், 8,400 கண்டக்டர்களுக்கும் முக கவசம் மற்றும் சோப்புகளை மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் வழங்கி துவக்கி வைத்தார். முதுநிலை துணை மேலாளர் (மனித வளம் மேம்பாடு) இளங்கோவன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X