பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளிக்கிழக்கு பயிரிட்ட விவசாயிகள் கலக்கம்! ...ஆலைகள் சிண்டிகேட்டால் விலை வீழ்ச்சி

Added : மார் 21, 2020
Share
Advertisement

சின்னசேலம்: கொரோனா வைரஸ் காரணமாக மரவள்ளிக் கிழங்குகளின் விலையை வீழ்ச்சியடையச் செய்த ஆலைகளின் சிண்டிகேட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் இறவையிலும், மலைப்பிரதேசமாக உள்ள கல்வராயன்மலையில் மானாவாரியிலும் 4000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது.முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ் ஆகிய ரகங்களில் மரவள்ளி பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் கிழங்குகள் அனைத்தும் சேலம், ஆத்துார், தலைவாசல் ஆகிய பகுதிகளில் செயல்படும் சேகோ தொழிற்சாலைகளுக்கு புரோக்கர்கள் மூலம் அனுப்பப்படுகிறது. ஜவ்வரிசி, மாட்டு தீவனம் மற்றும் உணவு பொருட்கள் உற்பத்திக்கு என பல்வேறு பயன்பாட்டிற்கு மரவள்ளி கிழங்குகள் உபயோகப்படுத்தப்படுகிறது.கடந்த ஆண்டு 73 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை தாய்லாந்து மரவள்ளிக் கிழங்கு 650 ரூபாய் விலை வழங்கப்பட்டது. அதேபோன்று இந்தாண்டும் விலை கிடைக்கும் என நம்பி ஏராளமான விவசாயிகள் தாய்லாந்து மரவள்ளி பயிரிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு மூட்டை 650 ரூபாய் விலைபோனது.ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பீதியால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தற்காலிக சுணக்கத்தை சேகோ தொழிற்சாலைகள் ஒரு காரணமாக கையில் எடுத்துக் கொண்டுள்ளன.தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, வெளிநாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பால் ஜவ்வரிசிக்கு போதிய விலை கிடைக்கவில்லை, இதுமட்டுமின்றி உற்பத்தி செய்யப்பட்ட ஜவ்வரிசிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது என வாய்மொழியாக ஒரு காரணத்தை வெளியே பரப்பி வருகின்றனர்.ஆலைகள் கூறிய காரணத்தை கையில் எடுத்து கொண்ட புரோக்கர்களும் விவசாயிகளிடம் மரவள்ளிக் கிழங்கு தேவை குறைந்துள்ளது. எனவே, மரவள்ளிக் கிழங்கு ஒரு மூட்டைக்கு 520 ரூபாய் மட்டுமே தர முடியும் என அடிமாட்டு விலைக்கு கிழங்குகளை கேட்டுள்ளனர்.இதனால் ஆடிப்போன விவசாயிகள் திடீரென ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் விளைந்துள்ள கிழங்குகளை என்ன செய்வதென்று தெரியாமல் புரோக்கர்கள் கேட்கும் விலைக்கே விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது குறித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயி பாலக்குமார் கூறுகையில், 'ஒரு வருட பயிரான மரவள்ளிக் கிழங்கு விளைவிக்க ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள விலை குறைவு காரணமாக என்ன செய்வது என தெரியாமல் புரோக்கர்களின் விருப்ப விலைக்கே விற்கப்படுகிறது.மேலும், கொரோனாவால் உண்மையிலேயே விலை குறைவு ஏற்பட்டதா, அல்லது புரோக்கர்களின் கமிஷன் காரணமாக திட்டமிட்டே விலை குறைக்கப்பட்டுள்ளதா என கண்டறிய முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.இதுமட்டுமின்றி இதுபோன்ற விலை பிரச்னைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க கள்ளக்குறிச்சியில் அரசு சார்பில் சேகோ தொழிற்சாலை அமைக்க வேண்டும்.மாவட்ட வேளாண் அதிகாரிகள் தலையிட்டு மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X