பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை முகாம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சங்கராபுரம்: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய இந்து தொடக்க பள்ளி சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.கொரோனா வைரஸ் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும், ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய இந்து தொடக்கப்பள்ளி சார்பில் கடந்த 4 நாட்களாக சங்கராபுரம் நகரில் உள்ள வார்டு பகுதிகளில் தலைமை ஆசிரியர் பிரான்சிஸ்கா தலைமையில் ஆசிரியர்கள் வேதநாயகி, குமுதா, உமா ஆகியோர் வீடு விடாகச் சென்று பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 4 நாட்களில் 18 புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியை தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X