பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகங்களுக்கு வாசகர்கள் வர தடை

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, நுாலகங்களுக்கு, வாசகர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; பொதுத்தேர்வு மட்டும் நடந்து வருகிறது.வணிக வளாகங்கள் மற்றும் மொத்த விற்பனை கடைகளுக்கும், விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த வரிசையில், சென்னையில் உள்ள முக்கிய நுாலகங்களுக்கு, வாசகர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.அண்ணா நுாற்றாண்டு நுாலகம் மற்றும் சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நுாலகம் போன்றவற்றுக்கு மட்டும், முதல்கட்டமாக, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நுாலகங்களில் பணியாற்றுவோர், தினமும் நுாலகத்துக்கு வந்து, நிர்வாக பணிகளை கவனிக்கும்படி, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனரும், நுாலகத்துறை பொறுப்பு அதிகாரியுமான, நாகராஜ முருகன் உத்தரவிட்டுள்ளார்.ஊர்ப்புற நுாலகங்கள், கிளை நுாலகங்களுக்கு வாசகர்கள் வர தடை விதிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X