பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலை திட்டம் ஒத்திவைக்கப்படுமா?

Added : மார் 21, 2020
Share
Advertisement

கண்டாச்சிபுரம்: முகையூர் ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை நடப்பதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது.கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட முகையூர் ஒன்றியத்தில், சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டதின் கீழ் வேலை நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தின் மூலம் இப்பகுதிகளில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடுவதை அரசு தடை செய்திருக்கிறது.இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்தில் 100லிருந்து 150 வேலை ஆட்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூட வாய்ப்பு உள்ளது.தற்போது வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வேலை இழப்பு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி இருப்பவர்களும் இதில் பங்கேற்க வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதால், அரசு அறிவித்தபடி மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு இத்திட்டத்தை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X