பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய, ஐந்து இடங்களில், ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு இதுவரை, 1.98 லட்சம் பேர் வந்துள்ளனர். அவர்களில், 4,253 பேர், தங்கியிருக்கும் அறைகளிலேயே, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுஉள்ளனர். இவர்களில், 45 பேர், கொரோனா வைரஸ், அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய நாடுகளில் இருந்து வந்தவர்கள். மருத்துவமனைகளில், கொரோனா அறிகுறியுடன், 32 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அறிகுறி தென்பட்ட, 333 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன; 303 பேருக்கு பாதிப்பு இல்லை என, தெரிய வந்தது. மூன்று பேருக்கு பாதிப்பு உறுதியானது; ஒருவர் குணமடைந்துள்ளார். மேலும், 27 பேரின் ரத்த மாதிரி முடிவுகள், இன்று வெளிவரலாம்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறிய உதவும் ஆய்வகங்கள், தமிழகத்தில், சென்னை கிங்ஸ் நிறுவனம், திருவாரூர், தேனி, திருநெல்வேலி, சேலம் அரசு மருத்துவமனைகள் என, ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கோவை, மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மையங்கள் அமைக்க, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X