பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்ட உத்தேச வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்கள் வெளியீடு

Added : மார் 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்,: விழுப்புரம் மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்ட வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்களை கலெக்டர் வெளியிட்டார்.விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஊரக மற்றும் நகர் பகுதிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்களை கலெக்டர் அண்ணாதுரை நேற்று வெளியிட்டார்.கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.இவ்வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்கள், நேற்று முதல், விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலகம் (கலெக்டர் வளர்ச்சிப்பிரிவு), நகராட்சிகளுக்குட்பட்ட 176 ஓட்டுச்சாவடிகள், 8 பேரூராட்சிகளுக்குட்பட்ட 126 ஓட்டுச் சாவடிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 2,891 ஓட்டுச்சாவடிகள் என மொத்தம் 3,193 ஓட்டுச்சாவடிகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X