பொது செய்தி

தமிழ்நாடு

சாலையை கடக்கும் காட்டெருமை : எச்சரிக்கையுடன் வாகனங்கள் இயக்க அறிவுரை

Added : மார் 21, 2020
Share
Advertisement

குன்னுார்:'குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில் சாலையை கடக்கும் காட்டெருமைகளால் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.குறிப்பாக, வெலிங்டன் ராணுவ மையப் பகுதியாக உள்ள போர் நினைவு சதுக்கம், பேரக்ஸ், பாரத் நகர், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் குட்டிகளுடன் காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. நேற்று போர் நினைவு சதுக்கம் அருகே, குட்டிகளுடன் காட்டெருமைகள் சாலையை கடந்து சென்றன. அப்போது அவ்வழியாக வந்த ராணுவ அதிகாரிகள், வாகனங்களை நிறுத்தி, காட்டெருமைகள் சென்ற பிறகு சென்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இந்த பகுதிகளில் அவ்வப்போது காட்டெருமைகள் சாலையை கடப்பதால் டிரைவர்கள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X