பார்லிமென்டில் நேற்று...

Added : மார் 21, 2020
Share
Advertisement

முக கவசத்திற்கு தட்டுப்பாடில்லைராஜ்யசபாவில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர், மன்சுக் லால் மண்டவியா பேசியதாவது:நாட்டில், நுாற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள், மாசு தடுப்பு முக கவசங்களை தயாரிக்கின்றன. ஒரு நாளைக்கு, 1.50 கோடி முக கவசங்கள் தயாரிக்கும் திறன் நமக்கு உள்ளது.

அதனால், முகக் கவசங்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுபோல, கையுறைகளுக்கும் தட்டுப்பாடு இல்லை. 'சானிடைசர்' எனப்படும் துாய்மையாக்கும் திரவ பாட்டில்கள், தேவைக்கேற்ப கிடைக்கின்றன. கொரோனா வைரஸ், வங்கதேசம் மற்றும் நேபாள எல்லையில் இருந்து வான்வெளி நிலம், நீர் போக்குவரத்து பயணியர் மூலம், இந்தியாவில் நுழையக் கூடும் என்பதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். அசாமில் குழந்தை திருமணங்கள் அதிகம்லோக்சபாவில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறியதாவது:கடந்த, 2016ல், 326 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இது, 2017 மற்றும் 2018ல், முறையே, 395 மற்றும் 501 ஆக உள்ளது. கடந்த, 2018ல், அசாமில், 88 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. அடுத்து, கர்நாடகாவில், 73 ; மேற்கு வங்கத்தில், 70; தமிழகத்தில், 67 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக, தேசிய குற்ற ஆவணப் பிரிவு தெரிவிக்கிறது. கடந்த, 2005 - 06ம் நிதியாண்டில், 18 வயதிற்கு முன் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் பங்கு, 47.4 சதவீதமாக இருந்தது. இது, 2015 - 16ம் நிதியாண்டில், 26.8 சதவீதமாக குறைந்துள்ளது.

16,859 குழந்தைகள் தத்தெடுப்புஐந்து ஆண்டுகளில், உள்நாட்டில், 16 ஆயிரத்து, 859 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில், 246 குழந்தைகள், பல்வேறு காரணங்களால் திரும்பி விட்டனர். அவர்களில், 165 குழந்தைகளை, புதிய குடும்பங்கள் தத்தெடுத்துள்ளதாக, மத்திய தத்தெடுப்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. விபரமறியும் பருவத்தில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோருக்கு, வளர்ப்பு குறித்து ஆலோசனை வழங்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, ஸ்மிருதி இரானி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X