சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருதமலை வெறிச்சோடியது: அடிவாரத்தில் வணங்கிச் சென்ற பக்தர்கள்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 மருதமலை வெறிச்சோடியது: அடிவாரத்தில் வணங்கிச் சென்ற பக்தர்கள்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில், பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.நேற்று முன்தினம் மாலையில் இருந்து, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
அடிவார நுழைவாயில் கேட் மற்றும் படிக்கட்டு கேட்டுகள் அடைக்கப்பட்டன. இதையறியாமல், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், அடிவார படிக்கட்டு பகுதியில் நின்று, முருகனை வணங்கிச் சென்றனர். பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால், மருதமலை அடிவாரம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பக்தர்கள் யாரும் வராததால், அடிவாரத்தில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன.திருமணத்துக்காக பதிவு செய்திருந்த பதிவுகளும், வரும், 31 வரை ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மறு உத்தரவு வந்த பின்னரே, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆதியோகி தரிசிக்க தடைஈஷாவில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகம், நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை, பொதுமக்கள் ஈஷாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள, மகாத்மா பசுமை இந்தியா திட்டத்தின் நாற்றுப்பண்ணைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டிக்கும் என, ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிருமி நாசினி தெளிப்பு'கொரோனா' வைரஸ் பரவி வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்கள் கைகளை கழுவிய பின்பே, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதை, சில பள்ளிகள் பின்பற்றவில்லை என, நமது நாளிதழில், நேற்று முன்தினம் (19ம் தேதி) செய்தி வெளியிடப்பட்டது.இதைத்தொடர்ந்து, நேற்று, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மையங்களில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மாணவர்கள் அமரும் இடம், கை கழுவும் இடம் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டன. மாணவர்களுக்கு அனைத்து மையங்களிலும், கிருமிநாசினி, சோப்புகளால் கைகளை சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.வக்கீல் சேம்பர் மூடல்கோவை நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்களுக்கான சேம்பர் செயல்படுகிறது. மூன்று தளங்கள் கொண்ட இக்கட்டடத்தில், வக்கீல்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில், மிக குறைந்த வாடகையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, வக்கீல்கள் தங்கள் வழக்காடிகளை சந்திப்பதை தவிர்க்க, வக்கீல்கள் கூடத்தை, வரும், 31ம் தேதி வரை மூட வக்கீல் சங்கம் முடிவு செய்துள்ளது.அதேபோல், நீதிமன்ற கட்டடங்களில் செயல்படும் அனைத்து வக்கீல் சங்க அலுவலகங்கள், நுாலகம் மூடப்படுகின்றன. வக்கீல்கள் சேம்பர் மூடப்படுவதால், அவரவர் அலுவலகத்தில் உள்ள கோட் மற்றும் வழக்கு பண்டல்களை முன்கூட்டியே எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை!டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில், மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டு, இரு செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். பஸ்சுக்காக காத்திருப்பவர்கள், பணி நிமித்தமாக அலுவலகம் வருவோர், கிருமி நாசினியால் கைகளை கழுவி விட்டு, தங்களை பரிசோதித்துக் கொள்கின்றனர். ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை மற்றும், 'தெர்மல் மீட்டர்' மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது. இதேபோல், அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் பரிசோதனை செய்ய, உதவி கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X