திருச்சி ரோடு பாலத்துக்கும் சிக்கல்!

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஆக்கிரமிப்பை அகற்றினால் மட்டுமேஇறங்கு தளம் அமைக்க வாய்ப்பிருக்குகோவை, மார்ச் 21-கோவை, திருச்சி ரோட்டில் கட்டும் பாலத்தில் இருந்து, வாலாங்குளம் பை-பாஸில் இறங்கு தளம் அமைக்க வேண்டுமெனில், மாநக ராட்சி தரப்பில் ஆக்கிரமிப்பு அகற்றிக் கொடுக்க வேண்டுமென, தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
கோவை - திருச்சி ரோட்டில், சுங்கம் அருகே 'ரெயின்போ' பஸ் ஸ்டாப் பகுதியில் துவங்கி, ராமநாதபுரம் அல்வேர்னியா பள்ளி அருகே முடியும் வகையில், 3 கி.மீ., துாரத்துக்கு, ரூ.253 கோடியில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டி வருகிறது.கடந்த ஆண்டு, மார்ச், 7ல் கட்டுமான பணி துவக்கப்பட்டது; 2021, மார்ச்சில் முடிக்கும் வகையில், ஒப்பந்த நிறுவனத்துக்கு, 24 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பாலம் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. துாண்கள் கட்டும் பணி ஒருபுறம் நடந்தாலும், மற்றொரு பகுதியில், 'டெக்' அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.ராமநாதபுரம் பகுதியில் இருந்து வருவோர், உக்கடம் செல்ல, வாலாங்குளம் பை-பாஸில் இறங்கும் வகையில், 400 மீட்டர் நீளத்துக்கு இறங்கு தளம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு, சுங்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் ஒரு துாண் அமைத்து, தளம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேலும், 400 மீட்டர் துாரத்துக்கு, குளக்கரையில் ரோட்டுக்கு இடதுபுறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியுள்ளது.அதேபோல், அரசு விருந்தினர் மாளிகை அமைந்துள்ள, காமராஜர் சாலையில் வருவோர், இப்பாலத்தில் பயணிக்க முடியாது. அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் வி.ஐ.பி.,கள், ராமநாதபுரம், சிங்காநல்லுார் பகுதியில் நடக்கும் விழாக்களுக்கு செல்ல வேண்டுமெனில், தரை வழியை மட்டுமே பயன்படுத்த முடியும். பாலத்தில் ஏறுவதற்கு தளம் அமைக்க வேண்டுமெனில், சுங்கம் பகுதியில், 400 மீட்டர் துாரத்துக்கு, நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கின்றனர், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர்.
அத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பாலம் கட்டும் பணி, திட்டமிட்டபடி, அடுத்தாண்டு, மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். வாலாங்குளம் பை-பாஸில் இறங்கு தளம் அமைக்க, மாநகராட்சி தரப்பில் ஆக்கிரமிப்பு அகற்றிக் கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றிக் கொடுத்தால், இறங்கு தளம் அமைக்கப்படும்; இல்லையெனில், அத்திட்டம் கைவிடப்படும். நிர்மலா கல்லுாரி பகுதியில் இருந்து ஏறு தளம் அமைக்க வேண்டுமெனில், நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X