பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் அவசர கால மையம் தயார்: கலெக்டர் தகவல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்: கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க விழுப்புரத்தில் அவசர கால மையம் தயார் நிலையில் உள்ளது.

இது குறித்து விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 32 வாகனங்கம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்த 52 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில், 25 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து விட்டது. மீதமுள்ள 27 பேர் தங்களின் வீடுகளில் சுகாதார துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.மேலும், மாவட்டம் தோறும் அவசர கால மையங்கள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரத்தில் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள எச்.எம்.டி.ஐ., கட்டடத்தை தேர்வு செய்துள்ளோம். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் உள்ள நபர்களை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.இந்த மையத்தில் நுாறு நபர்கள் தங்க வைப்பதற்கான, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X