சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் வங்கி மேலாளர் தற்கொலை

Added : மார் 21, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தனியார் வங்கி மேலாளர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி கே.பி.ஆர்., நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் பிரபு, 40; இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தியாகதுருகம் சாலையில் உள்ள தனியார் வங்கியில் வாகனங்களுக்கு கடன் வழங்கும் பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவி லாவண்யா மற்றும் பிள்ளைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்குச் சென்றவர், நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. தகவலறிந்து அவருடன் பணிபுரிபவர்கள் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது, பிரபு சேலையால் துாக்கு போட்டு இறந்திருப்பது தெரியவந்தது.தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரபுவின் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X