பொது செய்தி

தமிழ்நாடு

கங்கநாராயண் டூ சுண்டக்காமுத்தூர் குளத்தில் ரூ.10 கோடியில் கான்கிரீட் தடுப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement
 கங்கநாராயண் டூ சுண்டக்காமுத்தூர்  குளத்தில் ரூ.10 கோடியில் கான்கிரீட் தடுப்பு

கோவை:கோவை, கங்கநாராயண் சமுத்திரம் குட்டையில் இருந்து, பேரூர் சுண்டக்காமுத்துார் குளம் வரை, நீர் வழித்தடத்தின் இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது.கோவையில், நொய்யல் வழித்தடத்தில், 24 குளங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை பெய்தபோது, நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதால், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்றது. எந்தெந்த பகுதிகளில், தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டதோ, அங்கு வழித்தடம் ஏற்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில், கங்கநாராயண் சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை இருக்கிறது. இவ்விரு குளங்களும் நிரம்பினால், பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்துக்கு நீர் வரும்.கங்கநாராயண் சமுத்திரம் நிரம்பி வழிந்து செல்லும் நீர் வழிப்பாதை, கழிவு நீர் கலந்து செல்லும் பாதையாக மாறி விட்டது. பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி மற்றும் பேரூர் பேரூராட்சி பகுதிகளில் வெளியேற்றும் கழிவு நீர், நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இதற்கு தீர்வு காண, கங்கநாராயண் சமுத்திரம் குட்டையில் இருந்து, சுண்டக்காமுத்துார் குளம் வரை, ரூ.10 கோடியில், நீர் வழங்கு கால்வாய் இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணி, பேரூராட்சி சார்பில் நடந்து வருகிறது. இக்கால்வாயில் கழிவு நீரும் கலந்து வந்தால், குளத்தில் சேரும் மழை நீர் மாசடையும் என்கிற குற்றச்சாட்டு விவசாயிகள் தரப்பில் எழுந்துள்ளது.இதுதொடர்பாக, பேரூராட்சி தரப்பில் கேட்டபோது, 'கங்கநாராயண் சமுத்திரம் குட்டையில் இருந்து மாசாணியம்மன் கோவில் வரை அளவீடு செய்து, கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. அடுத்த கட்டமாக, குளம் வரை அளவீடு செய்து, சுவர் கட்டப்படும். கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்கான இயந்திரங்கள், கால்வாய்க்குள் பொருத்தப்படும். குளத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே செல்லும். பொதுப்பணித்துறையிடம் தடையின்மை சான்று பெற்று, அவர்களது அனுமதி பெற்றே, வேலைகள் செய்கிறோம்' என்றனர்.
பாலம் கட்டப்போறாங்க!பேரூர் சுண்டக்காமுத்துார் குளக்கரையில், கான்கிரீட் சுவர் கட்டும் பணி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இதன்பின், கோவைப்புதுாரில் இருந்து பேரூர் வருவதற்கு, குளக்கரையில் இரு வழிப்பாதையாக ரோடு போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. உபரி நீர் வழிந்தோடும் பகுதியில், ஆக்கிரமிப்பு வீடுகள் இருக்கின்றன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுண்டக்காமுத்துார் குளத்தில் உபரி நீர் வழியும்போது, சிறிய ஓடையாக சென்று, ஆற்றில் கலக்கும். அவ்வழித்தடத்தை மீட்டு, கால்வாய் அமைக்கப்படும். அப்பகுதியில், பாலம் கட்டுவதற்கு வாய்ப்புள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X