பொது செய்தி

தமிழ்நாடு

ஆதித்யா கல்லுாரியில் 'உத்சவ் 2020' கலை விழா

Added : மார் 21, 2020
Share
Advertisement

சரவணம்பட்டி:குரும்பபாளையத்தில் உள்ள ஆதித்யா தொழில்நுட்ப கல்லுாரியில், 'உத்சவ் 2020' ஆண்டு கலை மற்றும் விளையாட்டு விழா நடந்தது.இரு நாட்கள் நடந்த விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக, இந்திய கை பந்து அணி வீராங்கனை லதா பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசுகையில், ''விளையாட்டின்போது வெற்றி, தோல்விகளை பற்றி கவலை கொள்ளாமல், புதிய உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் விளையாட வேண்டும். அவ்வாறு விளையாடும்போது, வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன,'' என்றார்.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், 'டிவி' நிகழ்ச்சியாளர்கள் குரோஷி மற்றும் யோகி ஆகியோரது நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடந்தன.கல்லுாரி தலைமை செயல் அதிகாரி சித்ரா, மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கல்லுாரி முதல்வர் முத்து ஆண்டறிக்கை வாசித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X