பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டல்களில் கை கழுவும் 'சானிட்டைசர்': உணவு பாதுகாப்புத்துறை கறார் உத்தரவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

கோவை:'ஓட்டல்கள், டீக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கை கழுவ வசதியாக, சோப்பு, சானிட்டைசர் வைத்திருக்க வேண்டும்' என, உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் 'கொரோனா' விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் கை கழுவ தேவையான சோப்பு, திரவ சோப்பு (சானிட்டைசர்) ஆகியவை கட்டாயம் வைக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் கை சுத்தம் செய்தல், கொரோனா வைரஸ் பரவும் முறை, அறிகுறிகள், தடுப்பு முறை பற்றிய அறிவிப்பு பலகைகள், உணவகத்தின் நுழைவாயில், கை கழுவும் இடத்தில் வைக்கப்பட வேண்டும். சமைக்கும் உணவுகள், 100 சதவீதம் வேக வைத்தும், சூடாகவும் பரிமாறப்பட வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ள பணியாளர்கள் இருக்கக்கூடாது. சுத்தம் செய்வது தொடர்பான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். தங்கும் வசதியுள்ள நட்சத்திர ஓட்டல், இதர ஓட்டல்களில் வரக்கூடிய, தங்கக்கூடிய வெளி நாட்டவர், வெளிமாநிலத்தவர் விவரம், தினசரி அறிக்கையாக உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். கேரள எல்லையான வாளையார், பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைகட்டி பகுதிகளில் உள்ள உணவு சார்ந்த நிறுவனங்களில் பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிக்கும் அனைத்து தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்றி நடக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார். ஓட்டல்களில், 'கொரோனா' விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X