பொது செய்தி

தமிழ்நாடு

திரவுபதி அம்மன் தீமிதி திருவிழா

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.அதனையொட்டி கடந்த 12ம் தேதி மாலை பகாசூரனுக்கு அன்னமிடுதலும், தொடந்து 5 நாட்கள் திரவுபதி அம்மனுக்கு நாககன்னி, அல்லி, சுபத்திரை, ராஜ சூய யாகம், அர்ஜூனன் தபசு, திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கரகத் திருவிழாவும், நேற்று காலை 11:00 மணிக்கு பாரதம் படித்தல், மாடு வளைத்தலும், அரவான் களப்பலியும், பகல் 1:00 மணிக்கு காளி வேடமணிந்து கோட்டை இடித்தலும் நடைபெற்றது.பின்னர், மாலை 6:00 மணிக்கு கூந்தல் முடித்து திரவுபதி அம்மனை அக்னியில் இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டுதல், விடையாத்தி உற்சவம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X