பொது செய்தி

தமிழ்நாடு

ரத்தினம் கல்லுாரியில்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 ரத்தினம் கல்லுாரியில்

கோவை:ஈச்சனாரியில் உள்ள, ரத்தினம் கல்லுாரியில், ஆசிரியர்களுக்கு இணைய வழி மூலம் கற்பிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரத்தினம் கல்லுாரி குழுமம் சார்பில், மாணவர்களுக்கு இணைய வழியில், பாடங்கள் நடத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சிஅளிக்கப்பட்டது.ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் முரளிதரன் கூறியதாவது: மாணவ, மாணவியர் வழக்கமான வகுப்பில் கலந்து கொள்ளாமல், தங்கள் வீடுகளில் இருந்தே கல்வி கற்கும் ஒரு புதிய முயற்சியைமேற்கொண்டுள்ளோம்.'எம்எஸ் டீம்ஸ்' என்ற செயலி மூலம், மாணவர்களை தொடர்பு கொள்ளவும், முக்கிய சுற்றறிக்கைகளை அனுப்பவும், இணைய வழி கற்பித்தல், இணைய வழி தேர்வுகள் போன்றவை ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இச்செயலியின் மூலம் மாணவர்கள், சந்தேகங்களை ஆசிரியர்களிடம் இணைய வழியில்கேட்டுக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X