பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்கீடு

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சார்பு நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்கிய சட்ட அமைச்சருக்கு வழக்கறிஞர் சங்கத்தினர், நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.திருக்கோவிலுாரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வழக்கறிஞர்கள், பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்று நேற்று சட்டசபையில் நடந்த மானியக் கோரிக்கையில் சட்ட அமைச்சர் சண்முகம் திருக்கோவிலுாரில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என நிதி ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க., நகர செயலர் சுப்பு தலைமையில் நிர்வாகிகள் சட்டத் துறை அமைச்சரை நேற்று, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அதேபோல் திருக்கோவிலுார் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பிலும் அதன் நிர்வாகிகள் சட்ட அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.மேலும், திருக்கோவிலுார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.நிகழ்ச்சியில் முன்னாள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் ரஜினிகாந்த், லட்சுமிகுமார், அன்பு, துணைத் தலைவர்கள் ராஜ்குமார், பொருளாளர் சுப்ரமணியன், நுாலகர் கருணாகரன், வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, வேல்முருகன், சிவராமன், ரங்கநாதன், கோடீஸ்வரன், ரஞ்சித்குமார், பழனி பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X