பொது செய்தி

இந்தியா

19 மொழிகளில் பாடல்களை பாடுவேன்!

Added : மார் 21, 2020
Share
Advertisement
 19 மொழிகளில் பாடல்களை பாடுவேன்!

கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பல மொழிகளில், ஏராளமான பாடல்களை பாடி வரும் வாணி ஜெயராம்: நான் பிறந்தது வேலுார். நான்காம் வகுப்பு வரை, அங்கு தான் படித்தேன். அதன் பின், சென்னை வந்து விட்டோம். ஐந்தாம் வகுப்பிலிருந்து, மயிலாப்பூர், லேடி சிவசாமி அய்யர் பள்ளியில் தான் படித்தேன். வேலுாரில் இருக்கும் போது, நானும், என் சகோதரிகளும், கடலுார் ஸ்ரீனிவாச அய்யங்காரிடம், கர்நாடக இசையை கற்றோம்.

சென்னை வந்ததும், இசைப் பயிற்சி தொடர்ந்தது. பள்ளியில் படிக்கும் போது, இசைப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளேன். அதுபோல, கையெழுத்து போட்டி, பேச்சு போட்டி என, பிற போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிஉள்ளேன்.கல்லுாரி படிப்பு முடிந்ததும், வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. 1968ல் எனக்கும், ஜெயராமுக்கும் திருமணம் நடந்தது. அவர் அப்போது, மும்பையில் உயர் பதவியில் இருந்தார். அதனால், வங்கிப் பணியை, மும்பைக்கு மாற்றிக் கொண்டேன்.என் குரல் வளத்தை அறிந்த அவர், ஹிந்துஸ்தானி இசையை அறிய, உஸ்தாத் அப்துல் ரகுமான் சாஹேப் இடம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அவர் தான், முழு மூச்சாக இசைத் துறையில் இறங்க, அறிவுரை வழங்கினார். அதன்படி, வங்கிப் பணியை ராஜினாமா செய்து விட்டு, காலையிலிருந்து மாலை வரை, இசை பயின்றேன்.

நான், 1970ல் தான், முதலில் சினிமாவில் பாடினேன். ஹிந்திப் படம் ஒன்றில் நான் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டது. அதன் பின், ஒரு நாள், சென்னை மியூசிக் அகாடமியில், என் இசை நிகழ்ச்சி நடந்தது. என் குரலை கேட்டவர்கள், 'நம் தமிழ் பொண்ணு, ஹிந்தியில் சிறப்பாக பாடுகிறார்; அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லையே' என, ஆதங்கப் பட்டனர்.அதன் பின், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடலை பாடினேன். ஹிந்தி மட்டுமின்றி, மராத்தி, குஜராத்தி, போஜ்பூரி, மார்வாரி, பெங்காலி, ஒடியா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, 19 மொழிகளில், பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளேன். ஒரிசா மாநிலத்தின் ஒடியா மொழியில், 11 ஆண்டுகள், நம்பர் - ௧ பாடகியாக இருந்திருக்கிறேன்.

ஏராளமான விருதுகள், தேசிய விருதுகள், பட்டங்களை வாங்கிக் குவித்து உள்ளேன். தமிழில், எம்.எஸ்.வி., துவங்கி, கே.வி.மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என, பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பாடிஉள்ளேன்.பெரிய சாதனை செய்து விட்டதாக என்றுமே நான் நினைத்தது கிடையாது. ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் தான் நமக்கு குரு. அவ்வப்போது, ஏழைகளுக்கு சின்னச் சின்ன உதவிகள் செய்து வருகிறேன். அது, மனநிறைவை அளிக்கிறது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X