பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு வீடு; நெடுஞ்சாலைத்துறை மவுனம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கோவை:கோவை, செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியில், ரோட்டோர ஆக்கிரமிப்பு வீடுகள், இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது.கோவை, வைசியாள் வீதியில் இருந்து, தெலுங்குபாளையம் பிரிவு வரை, மாநில நெடுஞ்சாலைத்துறையால், நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, ரோட்டை ஆக்கிரமித்து, எட்டு ஓட்டு வீடுகள் உள்ளன. அண்ணா சாலையில் 143 வீடுகள் இருக்கின்றன.குடிசை மாற்று வாரியம் மூலமாக, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 117 பயனாளிகளுக்கு மாற்று வீடு வழங்கப்பட்டது. மற்றவர்கள் டோக்கன் வாங்கவில்லை. டோக்கன் வாங்கியவர்களும் வீடுகளை காலி செய்யாமல் இருக்கின்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறை இரு முறை நோட்டீஸ் அனுப்பியும், ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. கடந்த ஆண்டு, நவ., மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநில நெடுஞ்சாலைத்துறை முயற்சித்தது.அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும், அவகாசம் வழங்கினர். மூன்று மாதமாகியும் ஆக்கிரமிப்பு வீடுகள் இன்னும் அகற்றப்படாமல் இருக்கின்றன.மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குமரன் கூறுகையில், ''குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கு வசிப்பவர்களில் ஒருவர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. விரைவில் மாற்று வீடு வழங்கி, ஆக்கிரமிப்பு அகற்றி, ரோடு அகலப்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X