பொது செய்தி

தமிழ்நாடு

பனங்காட்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு ரத்து

Added : மார் 21, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி: பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவிலில் அரசு உத்தரவின் பேரில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பனங்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பிரதோஷம் மற்றும் ஆறு கால பூஜைகள் தினமும் நடைபெறுவது வழக்கம்.மாதாந்திர பிரதோஷத்தில் புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரதோஷ வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் வைத்துள்ள பேனரில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து அறநிலைய துறை உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் காரணமாக வரும் 31ம் தேதி வரை கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்ய உத்தரவிட்டதன் பேரில் அரசின் மறு உத்தரவு வரும் வரை பனையபுரம் கோவிலில் பிரதோஷ வழிபாடு, பால் அபிஷேகம், அன்னதானம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.இதே போன்று சிந்தாமணி தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரன், தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில், விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவில், அகத்தீஸ்வரன் கோவில்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X