போத்தனுார்:கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு நேற்று காலை அரசு மப்சல் பஸ், சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் சென்றது. ரயில்வே மேம்பாலத்தை கடந்தபோது, ரோட்டை கடக்க முயன்றவர் மீது மோதியது. படுகாயமடைந்த அந்நபர், சம்பவ இடத்திலேயே பலியானார்.போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் விசாரணையில், மதுக்கரை மார்க்கெட், முல்லை நகரை சேர்ந்த பழைய பாட்டில்கள் சேகரிக்கும் மீரான், 55 என தெரிந்தது. இவர், நேற்று விபத்தில் சிக்கிய இடத்தில் உள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடையில் பாட்டில்களை சேகரித்துள்ளார். எதிர்பகுதியில் இருந்த தனது மனைவி பாத்திமா அழைத்ததால், ரோட்டை கடந்தபோது, விபத்தில் சிக்கியது தெரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE