பொது செய்தி

இந்தியா

கொரோனா பாக்ஸ்

Added : மார் 21, 2020
Share
Advertisement

தனியார் நிறுவனங்களுக்கு அறிவுரை கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, டில்லியில் உள்ள தனியார் நிறுவன பணியாளர்கள், வரும், ௩௧ம் தேதி வரை, வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கான நடவடிக்கைகளை, நிறுவனத்தினர் மேற்கொள்ள வேண்டும் என, மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. முதியோர், கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவினால் பாதிக்கப்பட்டோர், வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் எனவும் அரசு கூறியுள்ளது. அனைத்து ஷாப்பிங் மால்களிலும், மளிகை, மருந்து, காய்கறி தவிர மீதமுள்ள விற்பனை மையங்களை மூடும்படி, முதல்வர், கெஜ்ரிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வரும், 22ல் ஊரங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டில்லியில், அன்று மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களை மூட உத்தரவுகொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, மஹாராஷ்டிராவில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களில், அனைத்து தொழில் நிறுவனங்களையும், வரும், ௩௧ம் தேதி வரை மூட வேண்டும் என, முதல்வர், உத்தவ் தாக்கரே நேற்று உத்தரவிட்டார். இந்த காலகட்டத்தில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என, நிறுவன உரிமையாளர்களுக்கு, முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக, மும்பையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், பிரார்த்தனை கூட்டங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்தும், ௩௧ம் தேதி வரை, ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

'பாலிவுட்' பாடகிக்கு கொரோனா தனிமையில் இருக்கும் நடிகை'பாலிவுட்' படங்களின் இயக்குனர், சேகர் கபூரின் மகள் காவேரி, அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் இசைக்கல்லுாரியில் படித்து வந்தார். கொரோனா காரணமாக கல்லுாரி மூடப்பட்டதால், நேற்று முன்தினம் இந்தியா வந்தார். விமான நிலைய பரிசோதனையில், காவேரிக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என அறிந்தும், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். நடிகையும், எழுத்தாளருமான அவரது தாயார் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியும், வீட்டில் தனிமையில் இருந்து வருகிறார்.

பிரிட்டனில் இருந்து லக்னோ வந்த, பாலிவுட் பின்னணி பாடகி கனிகா கபூருக்கு நடந்த பரிசோதனையில், அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். பாலிவுட் பழம்பெரும் நடிகர், அனுபம் கெர், அமெரிக்காவில் இருந்து நேற்று மும்பை திரும்பினார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், வீட்டில், தானே முன் வந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் மாணவர்கள்நிலை என்ன?கொரோனா வைரஸ் காரணமாக, வெளிநாட்டு விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதனால், பிலிப்பைன்சில் சிக்கியுள்ள, ௧,௦௦௦க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர், ஜி.கிஷன் ரெட்டி கூறும்போது, ''மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, இந்திய துாதரக அதிகாரிகளுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மாணவர்களை பரிசோதித்து, அங்கு வைத்திருப்பதா அல்லது இங்கு அழைத்து வருவதா என, சுகாதார அமைச்சகத்துடன் பேசி முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

கேரள ஐகோர்ட் உத்தரவுக்கு தடை'கொரோனா காரணமாக, பொதுமக்களிடம் இருந்து கடன், வரி உள்ளிட்டவற்றை, ஏப்.,௬ம் தேதி வரை, வங்கிகள், நிதி நிறுவனங்கள், வருமான வரித்தறை வசூலிக்க வேண்டாம். ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கும் இந்த தடை பொருந்தும்' என, கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்த மத்திய அரசின் மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ''பிரச்னையின்றி மக்கள் இணைய தளம் மூலம் வரி செலுத்தலாம்,'' என்றார்.

இதனை ஏற்று, கேரள உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், இடைக்கால தடை விதித்தது. மகனை மறைத்த பெண் அதிகாரி, 'சஸ்பெண்ட்'தென்மேற்கு ரயில்வேயில், பெண் அதிகாரி ஒருவரின், ௨௫ வயது மகன், ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பி உள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது, பரிசோதனையில் தெரியவந்தது. அதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், பெண் அதிகாரி, பெங்ளூரில் உள்ள ரயில்வே ஓய்வு விடுதியில், மகனை தங்க வைத்துள்ளார். இதனால், பெண் அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளதாக, ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறினார்.

பெண் தலைமறைவுபஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வசிக்கும், ௨௬ வயது பெண் ஒருவர், அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தார். அவரை, சண்டிகர் அரசு மருத்துவனையில், கொரோனா பரிசோதனைக்காக அதிகாரிகள் அனுமதித்தனர். முதல் கட்ட பரிசோதனை நடைபெற்ற நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, மருத்துவமனையில் இருந்து, நேற்று முன்தினம், அந்த பெண் தப்பி சென்றார். போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவான பெண்ணை தேடி வருகின்றனர். கடைகளில் அமைச்சர் சோதனைமஹாராஷ்டிராவில், 'கொரோனா அச்சம் காரணமாக, நாக்பூர் மாவட்டத்தில், உணவகங்கள், பார்கள், உணவு விற்பனை நிலையங்கள், கடைகள் உள்ளிட்டவற்றை மூட வேண்டும்' என, கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், நாக்பூரில், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர், அனில் தேஷ்முக், நேற்று சோதனை நடத்தினார். அப்போது, ஒரு உணவகம், சிற்றுண்டி மையம் ஆகியவை உத்தரவை மீறி செயல்படுவதை, அவர் கண்டறிந்தார். 'அவற்றின் உரிமையாளர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர் கூறினார். ரோட்டில் தும்மியவர் மீது தாக்குதல்மஹாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரின் குஜாரி பகுதியில் பைக்கில் வந்த ஒருவர் தும்மினார். எதிரே பைக்கில் வந்தவர், 'கொரோனா வைரஸ் பரவும் நிலையில், ஏன் முகத்தை கைக்குட்டையால் மறைக்காமல் வந்து, இதுபோல பொது இடத்தில் தும்முகிறீர்கள்' என, கேட்டார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தும்மிய நபர் தாக்கப்பட்டார்.

இந்த சண்டையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வீடியோ, சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. 'இந்த பிரச்னை தொடர்பாக, புகார் ஏதும் இல்லை' என, போலீசார் கூறினர். முழுமையாக முடங்கிய காஷ்மீர்ஜம்மு - காஷ்மீரில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் கூட்டமாக நடமாடுவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகில், முக்கிய வேலைகளுக்காக செல்வோர், அதற்கான ஆவணங்கள், அடையாள அட்டைகளுடன் அனுமதிக்கப்பட்டனர். கடைகள், பெட்ரோல் பம்புகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், நேற்று இரண்டாவது நாளாக, முழுமையாக முடங்கிய பகுதியாக, காஷ்மீர் காட்சி அளித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X