பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் கடை அடைக்க கலெக்டர் உத்தரவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடக்கோரி சப் கலெக்டர் நேரில் அறிவுறுத்தினார்.

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மக்களிடம் பரவாமல் தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகமாக வரும் பெரிய அளவிலான கடைகள், மால்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சியில் வழக்கம் போல் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.மக்கள் நடமாட்டம் குறையாமல் இயல்பு நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குராலா உத்தரவின் பேரில் சப் கலெக்டர் ஸ்ரீகாந்த், போலீசார் உதவியுடன் நகர பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடக்கோரி நேரில் சென்று அறிவுறுத்தினார்.மருந்துகடை, வங்கிகள் தவிர பொதுமக்கள் கூடும் அனைத்து கடைகளையும் இன்றும், நாளையும் மூடக்கோரியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நேற்று மாலை 5:00 மணியில் இருந்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X