பொது செய்தி

தமிழ்நாடு

பறவை காய்ச்சல் தடுக்க தீவிரம்: கால்நடைத்துறையினர் முயற்சி

Added : மார் 21, 2020
Share
Advertisement
 பறவை காய்ச்சல் தடுக்க தீவிரம்: கால்நடைத்துறையினர் முயற்சி

கோவை:தமிழக எல்லையை ஒட்டிய சோதனை சாவடிகளில், 'பறவை காய்ச்சல்' தடுப்பு நடவடிக்கையை கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில், 'பறவை காய்ச்சல்' ஏற்பட்டு, ஏராளமான கோழிகள் இறந்தன. இதையடுத்து, கேரளாவில் இருந்து கோழி மற்றும் தீவனங்கள் கோவை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு கால்நடை பராமரிப்பு துறை தடை விதித்துள்ளது.தமிழக - கேரள எல்லையை ஒட்டிய வாளையார், ஆனைகட்டி, வேலந்தாவளம், மீனாட்சிபுரம் உட்பட, 12 சோதனை சாவடிகளில், பறவை காய்ச்சல் தடுப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன.கடந்த, 9ம் தேதி முதல் கேரளாவில் இருந்து கோழிகள், தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்டறிந்து, கால்நடை பராமரிப்பு துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.கால்நடை பராமரிப்பு துறையினர் கூறியதாவது:பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக கடந்த, 9ம் தேதி முதல் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, அலங்கார பறவைகள் ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதர கால்நடை பயன்பாடு சார்ந்த வாகனங்களின் டயர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகு தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது.இதற்கென, 'குளோரின் டை ஆக்சைடு' எனும் கிருமிநாசினி பயன்படுத்தப்படுகிறது. வாளையார் சோதனை சாவடியில் துவக்கத்தில் இதுவரை, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இன்று (நேற்று) இரண்டு வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதற்கென, தினமும் மூன்று 'ஷிப்ட்'களில் டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X