காங்., -- எம்.எல்.ஏ., மகள் துாக்கிட்டு தற்கொலை| Dinamalar

காங்., -- எம்.எல்.ஏ., மகள் துாக்கிட்டு தற்கொலை

Added : மார் 21, 2020
Share
கோட்டா : ம.பி.,யில், ராஜினாமா செய்த காங்., - எம்.எல்.ஏ., தக்காத்தின் மகள், தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பரன் மாவட்டம், ஷாஹாபாத் அரசு சுகாதார மைய மருத்துவ அதிகாரி, டாக்டர் ஜெய் சிங் மெஹதா. இவரது மனைவி ஜோதி, 24.ம.பி., மாநிலம், போஹரி தொகுதியை சேர்ந்த காங்., - எம்.எல்.ஏ., சுரேஷ் தக்காத்தின் மகள், ஜோதி. ம.பி.,யில்,

கோட்டா : ம.பி.,யில், ராஜினாமா செய்த காங்., - எம்.எல்.ஏ., தக்காத்தின் மகள், தற்கொலை செய்து கொண்டார்.

ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பரன் மாவட்டம், ஷாஹாபாத் அரசு சுகாதார மைய மருத்துவ அதிகாரி, டாக்டர் ஜெய் சிங் மெஹதா. இவரது மனைவி ஜோதி, 24.ம.பி., மாநிலம், போஹரி தொகுதியை சேர்ந்த காங்., - எம்.எல்.ஏ., சுரேஷ் தக்காத்தின் மகள், ஜோதி. ம.பி.,யில், முதல்வர், கமல்நாத்துக்கு எதிராக, பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களில், சுரேஷ் தக்காத்தும் ஒருவர். நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டில், ஜோதி, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X