பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை மற்றும் வட்டார அரசு மருத்துவமனை சார்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் குருசாமி தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் லத்தீப், பி.டி.ஓ., நாராயணன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத் முன்னிலை வகித்தனர். விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜாக்குலின் வரவேற்றார். ராதாபுரம் வட்டார அரசு மருத்துவமனை சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பாபு ஆகியோர் விற்பனைக் கூடத்திற்கு வந்த விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை, கைகழுவும் முறை குறித்து செயல் விளக்கமளித்தனர்.பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேஸ்திரி தண்டபாணி, ராமலிங்கம், விற்பனை கூட மேற்பார்வையாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.இளநிலை உதவியாளர் ரத்தினவேல் சுப்ரமணியன் நன்றி கூறினார்.சங்கராபுரம்சங்கராபுரம் பஸ் நிலையத்தில் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி தலைமையில் நடந்தது. பேருராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், தாசில்தார் நடராஜன், பி.டி.ஓ., அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார பணியாளர்கள், ரோட்டரி தலைவர் ஆறுமுகம், செயலர் சுதாகர், விஜயகுமார் பங்கேற்றனர்.மூங்கில்துறைப்பட்டுமூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் மற்றும் புதுப்பட்டு பகுதிகளில் நேற்று கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் பரிந்துரைப்படி வி.ஏ.ஓ., வரதராஜன் தலைமையில் ஒவ்வொரு வீடாகச் சென்று 10 ரூபாய் லைப்பாய் சோப் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அதேபோன்று வெளியூரில் வீட்டிற்கு வருபவரிடம் விழிப்புணர்வுடன் இருங்கள் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பும்போது கை கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவி உள்ளே செல்ல வேண்டும் என அறிவுரை கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X