கொரோனா விடுமுறை: குறையாத மின்சார நுகர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விடுமுறை: குறையாத மின்சார நுகர்வு

Added : மார் 21, 2020
Share

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையிலும், சுட்டெரிக்கும் வெயிலால், மின் நுகர்வு குறையாமல் உள்ளது.தமிழகத்தில், 3.03 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.

ஒரு நாள் முழுவதும், இவர்கள் பயன்படுத்தும் மின்சார அளவு மின் நுகர்வு. அதன்படி, தமிழக மின் நுகர்வு தினமும், சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ளது. இது, கோடை காலத்தில், வழக்கத்தை விட அதிகரிக்கும்.கடந்த, 2019 ஏப்ரல், 12ல், மின் நுகர்வு, 36.99 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்சமாகும். தற்போது, வெயில் சுட்டெரித்து வருவதால், மின் நுகர்வும் அதிகம் உள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. அதிக மின் பயன்பாடு உள்ள வணிக வளாகங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே, வேலை செய்யவும் அறிவுறுத்தி உள்ளன. அப்படி இருந்தும், மின் நுகர்வு குறையாமல், தினமும், 34 கோடி யூனிட்களுக்கு மேல் உள்ளது. நடப்பு கோடையில், இம்மாதம், 18ம்தேதி மின் நுகர்வு, 34.85 கோடி யூனிட்களாக அதிகரித்து, உச்ச அளவாக உள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்கு விடுமுறை விடப்பட்டதால், மின் நுகர்வு குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது. வெயிலால், வீடுகளில்வழக்கத்தை விட, 'ஏசி' பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால், மின் நுகர்வு குறையவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X