பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் கோவில்களில் நடை சாத்தப்பட்டது

Added : மார் 21, 2020
Share
Advertisement

திண்டிவனம்: திண்டிவனத்தில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவில்களில் நடை சாத்தப்பட்டன.கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில், சுவாமி தரிசனம் வரும் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதன்பேரில், கோவில்களில் பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு அனைத்து கோவில்களின் நடை சாத்தப்பட்டுள்ளது.இதேபோல், திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற திந்திரிணீஸ்வர் கோவில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ரயில்வே கேட் முத்துமாரியம்மன் கோவில், கிடங்கல் அன்பநாயக ஈஸ்வரர் கோவில் ஆகியவற்றின் நடை சாத்தப்பட்டது. கோவில்களில் நடை சாத்தப்பட்டாலும் ஆகம விதிப்படி தினமும் பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, இன்று 21ம் தேதி சனி பிரதோஷத்தின் போது, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை அறிவிப்பு இந்து அறநிலையத் துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.மேலும், திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலின் நடை நேற்று சாத்தப்பட்டு, வழக்கம் போல விநாயகருக்கு நடைபெறும் பூஜைகள் மட்டும் நடந்தது. பிரசித்தி பெற்ற கோவில்களின் நடை சாத்தப்பட்டதால், பக்தர்கள் கோவில் வெளியிலிருந்தே சுவாமி கும்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X