பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பு வளையத்தில் விடுதிகள், முதியோர் இல்லம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கோவை:சமூக நலத்துறை கட்டுப்பாட்டில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பிரிவுகளில், 273 பெண்கள் விடுதிகள் செயல்படுகின்றன. இங்கு, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கியுள்ளனர். முதிேயார் இல்லங்களில் தற்சமயம், 650 பேர் தங்கியுள்ளனர். சமூக நலத்துறை கள பணியாளர்கள் மூலம், அங்கு பாதுகாப்பு சார்ந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.மாவட்ட சமூக நலத்துறை திட்ட அலுவலர் தங்கமணியிடம் கேட்டபோது, ''முதியோர் இல்லங்களுக்கு பார்வையாளர்கள் வருவதில்லை; இருப்பினும் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தியுள்ளோம். வயதானவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், கைக்குட்டை பயன்படுத்துவதை தவிர்த்து, ஒரு முறை பயன்படுத்தி வீசும், காகிதத்தை பயன்படுத்தி, பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்யவும் கூறியுள்ளோம். விடுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள கூறியுள்ளோம். பல விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் வெளியேறியதால், மூடப்பட்டுள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X