பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிக்க வாய்ப்பு ராணா கபூருக்கு சிறை வேண்டாம்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : 'யெஸ் பேங்க்' நிறுவனர் ராணா கபூர், சிறையில் அடைக்கப்பட்டால், கொரோனா பாதிப்பிற்கு ஆளாகக் கூடும் என, அவரது வழக்கறிஞர், நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்துள்ளார்.

ராணா கபூர், யெஸ் பேங்க் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது, முறைகேடாக பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, 4,200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுஇதையடுத்து, இம்மாத துவக்கத்தில், ராணா கபூர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, சட்ட விரோத பணப்பரிமாற்றம், லஞ்ச ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளன. இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கில், நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, ராணா கபூர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, மேற்கொண்டு காவலில் எடுத்து விசாரிக்க விரும்பவில்லை என, அமலாக்கத் துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, ராணா கபூரை, ஏப்.,2 வரை, நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி, பரசுராம் ஜாதவ் உத்தரவிட்டார்.

அப்போது, ''சிறையில் அடைத்தால், ராணா கபூருக்கு கொரோனா வைரஸ் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், அவரை தனியாக பெரிய அறையில் தங்க வைக்க வேண்டும்,'' என, அவரது வழக்கறிஞர், அபத் பான்டா தெரிவித்தார். மன அழுத்தம்இதையடுத்து, நீதிபதியிடம், தனக்கு ஏழு ஆண்டுகளாக ஆஸ்துமா பிரச்னை உள்ளதாகவும், தற்போது தீவிர மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் ராணா கபூர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ராணா கபூருக்கு உரிய மருத்துவ வசதிகளை அளிக்குமாறு, சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, ராணா கபூரை, வேறொரு வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில், சி.பி.ஐ., 'வாரன்ட்' பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
21-மார்-202020:42:40 IST Report Abuse
RajanRajan அப்புறம் என்ன அந்த வக்கீல் வுட்டிலேயே சிறை வச்சு அழகு பார்த்துட வேண்டியது தானே.
Rate this:
Cancel
Rajasekaran - Singapore,சிங்கப்பூர்
21-மார்-202011:35:46 IST Report Abuse
Rajasekaran சிறையில் வைத்தால் கொரோனா தொற்று ஏற்படும் என்று வக்கீல் எப்படி கூறுகிறார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X