பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பாராட்டு விழா

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஷோட்டாகான் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா கீழையூர் டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் நடந்தது.விதைவிருட்சம் அறக்கட்டளைத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். சித்தாமூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன், டேனிஷ் மிஷன் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மோகன் குமார், சமூக சேவகர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். கராத்தே பள்ளி நிர்வாகி ஏழுமலை வரவேற்றார்.அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவையின் அகில இந்திய இணைச் செயலர் உதயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான 37வது போட்டியில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் 10 பேருக்கு பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கவுரவித்தார். ஆசிரியர் ஆறுமுகம், ராமமூர்த்தி ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி பேசினர். அனிதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X