பொது செய்தி

தமிழ்நாடு

சுட்டெரித்தது வெயில்; 'குளிர்வித்தது' மழை

Added : மார் 21, 2020
Share
Advertisement
 சுட்டெரித்தது வெயில்; 'குளிர்வித்தது' மழை

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்ததால், பொதுமக்கள் ஆனந்தம் அடைந்தனர்.கோவை மாவட்டம் முழுவதும், கடந்த மூன்று மாதமாக, மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. ஜனவரி இறுதி முதலே, வெயில் சுட்டெரிக்கத் துவங்கியது.
பகல் நேரங்களில், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர். வெயிலில் வாடி வந்தவர்களை, குளிர்விக்கும் விதமாக தொண்டாமுத்துார், மருதமலை, வடவள்ளி, ஆலாந்துறை, சாடிவயல், நரசீபுரம், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று பகல், 2:00 மணி அளவில், லேசாக மழைத்துாறல் துவங்கியது.சிறிது நேரத்தில், மழையின் வேகம் சற்று அதிகரித்தது. இரண்டு மணி நேரம் தொண்டாமுத்துார் வட்டாரத்தில் சாரல் மழை பெய்தது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்ததால், பொதுமக்கள் ஆனந்தம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X