பொது செய்தி

தமிழ்நாடு

பத்திர பதிவு ; 'கொரோனா' பரவலை தடுக்க நடவடிக்கை

Added : மார் 21, 2020
Share
Advertisement
 பத்திர பதிவு ;  'கொரோனா' பரவலை தடுக்க நடவடிக்கை

சென்னை : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, பத்திரப்பதிவு பணிகளில், பாதுகாப்பு நோக்கில், 10 புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர், ஜோதி நிர்மலா பிறப்பித்துள்ள சுற்றறிக்கை: சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு, பத்திர பதிவு பணிகள் தவிர்த்து, வில்லங்க சான்று உள்ளிட்ட தேவைகளுக்காக வருவோரை அனுமதிக்க வேண்டாம் விரல் ரேகை, புகைப்படம் எடுக்கும் போது,'மாடுலர் ஒர்க் ஸ்டேஷன்' மேஜையை பயன்படுத்தி, அலுவலருக்கும், பொது மக்களுக்கும், 1 மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதி செய்யுங்கள் சார் - பதிவாளர் அலுவலக வாயிலில், கை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். பத்திர பதிவுக்கு வரும் மக்களை, கை கழுவிய பின், உள்ளே அனுமதியுங்கள் ஒவ்வொரு பணியாளரும், அவரவருக்கு என வழங்கப்பட்டுள்ள, விரல் ரேகை பதிவு இயந்திரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்; அதற்கேற்ப பணிகளை பகிர்ந்து கொள்ளலாம் விரல் ரேகை பதிவு இயந்திரத்தின் அருகில், 'சானிடைசர்' வைத்து, ஒவ்வொரு முறையும்கைகளை சுத்தம் செய்து, பயன்படுத்த வேண்டும் பதிவுக்கு தாக்கலாகும்ஆவணங்கள், பிற சான்றிதழ்களை வாங்கி பார்க்கும் போது, பணியாளர்கள், அலுவலர்கள்கையுறை அணிந்து கொள்ளலாம் 1,000 ரூபாய் வரையிலான கட்டணங்களை, பணம் எண்ணும் இயந்திரம் வாயிலாக பெறும் போது, ஒவ்வொரு முறையும், சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்வது அவசியம் பதிவு பணியின் போது, சார் - பதிவாளருக்கும், பொது மக்களுக்கும், 1 மீட்டர் இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் சோப்பு, சானிடைசர்ஆகியவற்றுக்கான செலவை, சில்லறை செலவினங்களின் கீழ் மேற்கொள்ளலாம் பதிவு முடிந்த ஆவணங்களை பெற, பொது மக்கள் மீண்டும் மீண்டும் வருவதை தவிர்க்க, ஒரு முறை வரும்போதே வழங்கிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X