பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்பதாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்': கல்வித்துறை அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

கோவை:ஆண்டு இறுதி தேர்வு நடத்தாமல், ஒன்பதாம் வகுப்பு வரை, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.'கொரோனா' வைரஸ் பரவுவது அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும், 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும், ஏப்., மாதத்தில் இருந்து, நோய் பரவுவது அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், குழந்தைகளை இந்த வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கு, வரும், 27ம் தேதி துவங்குகிறது. தேர்வின் போது மட்டும், இம்மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இருப்பினும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, கிருமிநாசினி தெளித்தல், இருக்கைகளை சுத்தம் செய்தல், ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வைத்தல், காய்ச்சல் அறிகுறி இருப்போரை தனியறையில் தேர்வு எழுத வைத்தல் உள்ளிட்ட, பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.பள்ளி துவங்கினால், அனைத்து வகுப்புகளுக்கும் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில், பெற்றோரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர். எனவே, ஆண்டு இறுதித்தேர்வு நடத்தாமல், விடுமுறை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பள்ளிகளுக்கு வரும், 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக, நோய் பரவும் நிலையை கண்காணித்து வருகின்றனர். ஆண்டு இறுதி தேர்வு நடத்தாமல், பள்ளி விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் தான், பள்ளிகளுக்கு தெரிவிக்க முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X