சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்று குழந்தைகளின் தாய் தற்கொலை ..

Added : மார் 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்; மூன்று குழந்தைகளின் தாய் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள காரணமான கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கொணலுாரை சேர்ந்தவர் வீரன்,30; இவரது மனைவி அருந்தாமரை, 27; திருமணமாகி ஏழாண்டாகும் இவர்களுக்கு அபிேஷக், 6; ஆஷா, 4; விஜய்ஸ்ரீ, 2; ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வீரன், நகை மற்றும் பணம் கேட்டு அருந்தாமரையை துன்புறுத்தி வந்துள்ளார்.இதுதொடர்பாக நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மாமனார் பொன்னுசாமி, மாமியார் ருக்குமணி, கணவர் வீரன், 30; மைத்துனி அஞ்சலைதேவி,20; ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கினர்.அதில் மனமுடைந்த அருந்தாமரை, நேற்று அதிகாலை 3:30 மணியளவில் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில், வீரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது தற்கொலைக்கு துாண்டியதாக அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X