சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை இழந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை

Added : மார் 21, 2020
Share
Advertisement

வடவள்ளி:வடவள்ளியில், மனைவியை இழந்த சோகத்தில் இருந்த கணவன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வடவள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,35; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணமாகி, 2 மகன்கள் உள்ளனர். ஓராண்டுக்கு முன், உடல்நலக்குறைவால் இவரது மனைவி உயிரிழந்தார்.அச்சோகத்தில் இருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாதபோது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X