பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்கள் 'பயோடேட்டா': தகவல் திரட்டும் போக்குவரத்து போலீசார்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கோவை :மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்த தகவல்களை திரட்டும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கோவையில் ஆம்னி, தனியார் பஸ்கள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாகனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் போக்குவரத்து போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். இவ்வரிசையில், மாநகரில் இயக்கப்பட்டு வரும் ஆட்டோக்கள் குறித்த தகவல்கள் புதுப்பிக்கப்படவில்லை. சமீபகாலமாக, கோவையில் பல்வேறு ஆட்டோக்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதில், பல்வேறு ஆட்டோக்களின் தகவல்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.தற்போது, ஆட்டோக்களின் தகவல்களை சேகரித்து, அனைத்தையும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து போலீசார், அதற்கான பணிகளை துவங்கியுள்ளனர்.கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில், ''கடந்தாண்டுகளில் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டன. அதன்பின், அத்தகவல்கள் சேமித்து வைக்கப்படவில்லை. அதனால், அதற்கான பணி தற்போது துவங்கியுள்ளது. ''ஆட்டோ உரிமம், உரிமையாளர், டிரைவர்கள், அவர்களது ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகவல்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். வரும் திங்கட்கிழமைக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X