பொது செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு: சமுதாய நல்லிணக்க பேரவை முதல்வருக்கு கடிதம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கோவை:குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.,) அனைத்து சமுதாயத்தினர் ஆதரவு தெரிவித்திருப்பதோடு, இஸ்லாமியர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி, சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.சமுதாய நல்லிணக்க பேரவை மாநில கமிட்டி உறுப்பினர் சிவலிங்கம், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:அகதிகளாக வருவோரை காப்பது நம் கடமை. மத்திய அரசு, குடியுரிமை சட்டத்தில், 2019ம் ஆண்டு திருத்தம் செய்து சட்டமாக்கியது. இதுகுறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சியினர் பரப்புவதால் மாநிலத்தில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என, மத்திய அரசு விளக்கியுள்ளது; பிரதமர் மோடியும் உறுதி அளித்துள்ளார். மக்கள் தொகை பதிவேட்டு பணியை தற்காலிகமாக நிறுத்துவதாக மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது; இவ்வறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குடியுரிமை சட்டம் தொடர்பாக, இஸ்லாமியர்களுக்கு விளக்க அமைதி கூட்டங்கள் நடத்த வேண்டும்.இக்கோரிக்கையை, 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயம், அகில பாரத பிராமணர் சங்கம், அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீசவுடேஸ்வரி நற்பணி மன்றம், அய்யா வைகுண்டர் திருப்பதி - கோவை, போயர் சமுதாயம், தலித் சேனா, தேசிய தளபதி சுந்தரலிங்க தேவேந்திரனார் பாசறை, தேவாங்கர் சங்கம், தேவேந்திர குல வேளாளர் சங்கம், தேவேந்திரகுல வேளாளர் பேரவை, கம்மாளர் பாதுகாப்பு பேரவை, கவர இன முன்னேற்ற சங்கம், கோவை மாவட்ட யாதவர் பண்பாட்டுக் கழகம், தமிழ்நாடு பூலுவக் கவுண்டர் சமூகநல சங்கம், கோவை மாவட்ட சலவைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்.கோவை மாவட்டத் தேவர் பேரவை, கோவை மாவட்ட யாதவர் பேரவை, நாடார் மக்கள் மன்றம், தமிழ்நாடு, நமது கொங்கு முன்னேற்ற கழகம், நாயுடு சமூக நலச்சங்கம், பாலையநாட்டு வல்லம்பர் பேரவை. ராஷ்ட்ரீய ஸனாதன சேவா சங்கம், சைவப் பெருமக்கள் பேரவை-கோவை, சிங்காநல்லுார் நாயர் சர்வீஸ் சொசைட்டி, சித்தாபுதுார் சி.எம்.சி., காலனி துப்புரவு பணியாளர் நலச் சங்கம், ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி தேவாங்கர் இளைஞர் மன்றம்.தமிழ்நாடு ஈழவ தீயா சேவா சமாஜம், தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம் - கோவை, தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம் - பழனி, தமிழ்நாடு குறும்ப மக்கள் முன்னேற்ற சங்கம்.தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் பேரவை, தமிழ்நாடு தலைமை அகமுடையார் சங்கம், தெலுங்குபாளையம் பார்கவ குல இளைஞர் சங்கம், தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சங்கம், உப்பிலிய நாயக்கர் முன்னேற்ற சங்கம், வன்னியகுல ஷத்திரியர் சங்கம் ஆகிய, 36 சமூகத்தினர் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில் அமைதி திரும்ப, அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.இவ்வாறு, அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X