பொது செய்தி

தமிழ்நாடு

மது விற்பனை நேரம் குறைக்கப்படுமா?

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'டாஸ்மாக்' கடைகளை மூடாத, தமிழக அரசு, அவை செயல்படும் நேரத்தையாவது குறைக்க வேண்டும்என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது.

இந்த கடைகள், மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை செயல்படுகின்றன. குறிப்பாக, மாலை, 6:00 முதல், இரவு, 10:00 மணி வரை தான், கூட்டம்அலைமோதுகிறது. தினமும் சராசரியாக, மது கடைகளில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.சீனாவை தாக்கிய, கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ், தமிழகத்தில் பரவாமல் இருக்க, மாநில அரசு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று, பல தரப்பினரும், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மது கடைகளை ஒட்டியுள்ள, பார்களை, 17ம் தேதி முதல், 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டது. கொரோனா அபாயம் காரணமாக, சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் என, பல தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால், பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், மது விற்பனை வழக்கம் போல உள்ளது. இந்நிலையில், 'மது கடைகள் மூடப்பட உள்ளது' என்று, சிலர், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர். அதனால், இரவில், மது வகைகளை வாங்க, பலரும் மது கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை மூடாத அரசு, அவை செயல்படும் நேரத்தையாவது குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.விடுமுறை விடப்படுமா?கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வரும், 22ம் தேதி, நாடு முழுவதும், காலை, 7:00 முதல் இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு வெளியே வராமல், கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு, பொது மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், டாஸ்மாக் கடைகளை, நாளை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
21-மார்-202018:26:22 IST Report Abuse
s.rajagopalan 10 , 16 நாட்கள் குடிக்காவிட்டால் உயிர் பொய் விடுமா ? அப்படி போனால் போகட்டும். இவங்க குடித்துவிட்டு நடித்ததெரிவில் உருண்டு நோயை மற்றவர்களுக்கு பரப்புவான். கடையை மூடுங்கய்யா ? அரசியல்வாதிகளுக்கு வருமானம் குறையும் ...அவ்வளவுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X